சின்னசேலம் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

606பார்த்தது
சின்னசேலம் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
சின்னசேலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதியில் தி. மு. க. , வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.

சின்னசேலம் தி. மு. க. , வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாய்பட்டினம், கடத்துார், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, எலியத்துார், பாண்டியங்குப்பம், கல்லாநத்தம் உட்பட பல்வேறு கிராமங்களில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம். எல். ஏ. , தலைமையில் தி. மு. க. , வேட்பாளர் மலையரசன் நேற்று ஓட்டு சேகரித்தார்.

தொடர்ந்து சின்னசேலம் பேரூராட்சி பகுதியிலும் ஓட்டு சேகரித்தார்.

மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், காங். , மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், வி. சி. , மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.

இதில் வனப்பகுதியில் தார்சாலை அமைத்து கொடுப்பேன், சின்னசேலம் பஸ் நிலையம் விரிவாக்கம், நகரின் சாலை வசதிகள் தொடர்பாக உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரசனைகள் தொடர்பாக பல்வேறு வாக்குறுதி அளித்து ஆதரவு கோரினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி