நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு கால் நகங்கள் தோலுக்குள் உள்நோக்கி வளர்ந்து வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த கால் நகங்கள் ஒனைகோ க்ரிப்டோசிஸ் என அழைக்கப்படுகிறது. நகங்களை தவறாக வெட்டுதல், காலில் ஏற்படும் காயம் போன்றவற்றால் இவ்வாறு நகங்கள் உள்நோக்கி வளர்கிறது. தினமும் கால்களை 4-5 முறை வெதுவெதுப்பான நீரில் கழுவுதல் இதற்கு தீர்வாகும். பூஞ்சை தொற்று, பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.