ஸ்மார்ட்போனை பராமரிப்பது எப்படி?

65பார்த்தது
ஸ்மார்ட்போனை பராமரிப்பது எப்படி?
ஸ்மார்ட்போனுக்கு பேக் கேஸ் மற்றும் தரமான ஸ்கிரீன் கார்டை பொருத்த வேண்டியது அவசியம். மொபைல் போன் நீண்டநாள் உழைக்க வேண்டுமென்றால், அடிக்கடி போனை மென்மையான துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். ஸ்மார்ட் போனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்காதீர்கள். இல்லையென்றால் சூடாகி உள்ளிருக்கும் பாகங்கள் பாதிப்படையும். போனை 100 சதவீதம் முழுதும் சார்ஜ் செய்யாதீர்கள். 20% முதல் 80%, இதற்கு இடைப்பட்ட அளவு தான் சார்ஜ் செய்ய வேண்டும்.