சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ., 12) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாடு கடற்கரைக்கு அருகே நகரும்போது கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.