அரசு அதிகாரியின் ரௌடிசம்.. அதிர்ச்சி வீடியோ

76பார்த்தது
மத்திய பிரதேசத்தில் பந்தவ்கார் பகுதியின் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் அமித் சிங். இவர், கார் ஒன்றில் அதிகாரிகளுடன் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது ஒரு கார் இவர்களை முந்தி சென்றுள்ளது. இதில் அவருடைய காரின் மீது அந்த கார் மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி முந்தி சென்ற வாகனத்தில் இருந்த 2 பேரை அரசு அதிகாரி சிங் மற்றும் அவருடன் காரில் பயணித்தவர்கள் தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக போலீசார் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாக நிலையில் மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.