விரலால் கேக் வெட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்

74பார்த்தது
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நேற்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அதிமுகவினர் பலர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை அன்னதானம் வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடினர். இந்நிலையில் தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது வெட்டுவதற்காக கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெட்டுவதற்கு கத்திதான் வைக்கவில்லை போல. நீண்ட நேரம் கத்தியை தேடிய அவர் கடைசியில் பொறுமையை இழந்து தனது விரலால் கேக்கை வெட்டி அனைவர்க்கும் பங்குபோட்டு கொடுத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.