“சனநாயகப் போராளியே” - ராகுலுக்கு திருமா பிறந்தநாள் வாழ்த்து

50பார்த்தது
“சனநாயகப் போராளியே” - ராகுலுக்கு திருமா பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்துக்களை கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசமைப்புச் சட்டத்தையே ஆயுதமாக ஏந்தி கொள்கைப் பகைவர்களின் கொட்டத்தை ஒடுக்கிய புரட்சிகர சனநாயகப் போராளி திரு. ராகுல் காந்தி அவர்களின் பணிகள் சிறக்க, சாதனைகள் பெருக எமது வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.