பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அருள் ஜோதி செல்வராஜின் பேத்தி ஸ்ரீவைசாலியின் 4வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜின் பேத்தி ஸ்ரீவைசாலியின் நான்காவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றனர். பின்னர் அருள் ஜோதி செல்வராஜ் எடப்பாடி பழனிசாமிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.