திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கண்டித்த துரைமுருகன்

70பார்த்தது
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கண்டித்த துரைமுருகன்
வேலூர்: குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பாக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பாதியில் மேடைக்கு வந்த துரைமுருகன் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு பின்பு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுவதில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். எதிர்கட்சி வேட்பாளர்கள் குறித்து அநாகரிகமாக பேசக் கூடாது. அதுபோல் பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று கடிந்து கொண்டார்.