சிறுநீர் எந்த நிறத்தில் வந்தால் என்ன பிரச்சனை என தெரியுமா?

60பார்த்தது
சிறுநீர் எந்த நிறத்தில் வந்தால் என்ன பிரச்சனை என தெரியுமா?
அடிக்கடி மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் ஒருவர் போதிய அளவுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கிறார் என்று அர்த்தம். அதே நேரத்தில் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவருடைய கல்லீரலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். நுரையுடன் கூடிய சிறுநீர் வந்தால் குடல்களில் ஏற்படக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம் என்று அர்த்தம். ரத்தம் போல் சிறுநீர் சிவப்பு நிறத்தில் இருந்தால் சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பாகக் கூட இருக்கலாம். சிறுநீரக புற்றுநோயாகவும் இருக்கலாம்.
எந்த நிறமும் இல்லாமல் சிறுநீர் வருவதும் நல்லதல்ல. ஏனென்றால் அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் எந்த நிறமும் இல்லாமல் வெளியேறும். ஆரோக்கியமான சிறுநீரின் நிறம் வெளீர் மஞ்சள். அதாவது லேசான மஞ்சள் நிறம் ஆகும்.