சிலருக்கு கழுத்து, அக்குள், தொடை, கண் இமை, மார்பு போன்ற பகுதிகளில் மருக்கள் ஏற்படக்கூடும். மருக்கள் அதிகம் இருப்பவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ரத்தத்தில் கொலஸ்டரால் அளவு அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடல் பருமன், அதிக கொலஸ்டரால், இன்சுலின் எதிர்மறை, மரபணுக் கோளாறு ஆகியவை மருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகும். மருக்கள் அதிகமாக இருந்தால் தோல் நோய் நிபுணரிடம் காண்பித்து அகற்ற வேண்டும்.