டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பட்டாசு பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த வரை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழநாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குறைந்த மாசு, குறைந்த ஒலி கொண்ட பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுத்துள்ளது.