மக்கள் நீதிமன்றத்தில் 8000 வழக்குகளுக்கு தீர்வு

75பார்த்தது
மக்கள் நீதிமன்றத்தில் 8000 வழக்குகளுக்கு தீர்வு
திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அந்த அமர்வுகளின் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்ற வழக்குகள் மற்றும் முன்வழக்குகள் என மொத்தம் 8 ஆயிரத்து 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

மேலும் இதன்மூலம் தரப்பினர்களுக்கு தீர்வு காணப்பட்ட மொத்தத் தொகை 15 கோடியே 93 லட்சத்து 36 ஆயிரத்து 737 ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்தி