இலவச வாகன வசதி ஏற்பாடு

60பார்த்தது
மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வசதியாக இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், வாக்குப்பதிவின்போது, மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வசதியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தால் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வாக்களிப்பதற்கு வாகன வசதி தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் “saksham“ என்ற செயலி மூலமாகவும், தேர்தல் மைய உதவி எண் 1950 மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணம் இல்லா தொலைபேசி எண் 18005994785 மூலமாகவும் தொடர்பு கொண்டு இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளளலாம், என வியாழக்கிழமை மாலை 6. 30 மணியளவில் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி