வேடசந்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மருதப்பா (வயது 65) ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள எம் கே ஸ்டீல் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்பொழுது அவரது பின்னால் வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட உறவினர்கள் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிந்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.