ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால், அப்பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு, சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண், பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனால், இந்த சடங்கை செய்தால் மட்டுமே பெண்ணின் குடும்பத்தினரை ஊருக்குள் அனுமதிப்போம் என கிராம மக்கள் கூறியுள்ளனர்.