அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது அலை அலையாய் ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதலில் அமெரிக்காவின் தலையீட்டால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.