மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) தொடங்கியுள்ளது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோயில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், மாநாட்டு மேடைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பச்சை வேட்டி கட்டி வருகை தந்துள்ளார். அவருக்கு பக்தர்கள் துண்டை சுற்றியப்படி, உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.