குப்பையில் கிடந்த 2 உலோகத்தாலான சுவாமி சிலைகள்

56பார்த்தது
குப்பையில் கிடந்த 2 உலோகத்தாலான சுவாமி சிலைகள்
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட என். எஸ். நகா் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சாலையோரமாக கிடந்த குப்பைகளிலிருந்து 2 உலோகத்தாலான சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு, தூய்மைப் பணியாளா்கள் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாா், மேற்கு வட்டாட்சியா் வில்சன் தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தச் சிலைகளை மீட்டு, மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வைப்பறையில் வைத்தனா்.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி