தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நடத்துனர் ஜெயக்குமார்

79பார்த்தது
போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி இன்று ஓய்வு பெற்ற சிஐடியு திண்டுக்கல் போக்குவரத்து துறை மண்டல தலைவர் ஜெயக்குமார் திண்டுக்கல் போக்குவரத்து துறை அலுவலகம் கிளை 3 முன்பு ஓய்வு பெறுபவர்களுக்கு முழுமையான பண பலன்கள் வழங்காததை கண்டித்து நிர்வாகம் நடத்தும் ஓய்வு பெறும் நாள் விழாவை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின் அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறும் போது, "போக்குவரத்து கழகத்தில் 29 ஆண்டுகள் பணி செய்து தற்போது பணி ஓய்வு பெறுகிறேன். நிர்வாகம் வழங்க வேண்டிய பணி ஓய்வு பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை இதனால் பணி ஓய்வு விழாவினை புறக்கணித்துள்ளேன்.

ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு DA வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்று 22 மாதங்கள் ஆகியும் இதுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த பலனும் வழங்கப்படவில்லை 01. 04. 2004 க்கு பின்பு பணியில் சேர்ந்த எந்த தொழிலாளிகளுக்கும் பென்ஷன் இல்லை.

பனியின்போது இறந்த தொழிலாளிகளுக்கு எந்த ஒரு பலனும் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே புதிய பென்சினை ரத்து செய்து 1998ல் உருவாக்கப்பட்ட பென்ஷனை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ரூ. 7500 வைத்துக் கொண்டு மருத்துவ காப்பீடு இல்லாமல் ஓய்வு பெறும் தொழிலாளி கஷ்டப்படும் நிலை உள்ளது.

இதனை கண்டித்து நிர்வாகம் நடத்தக்கூடிய இந்த ஓய்வு பெறும் விழாவை புறக்கணித்து உள்ளேன்" என தெரிவித்தார்.