மகனுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.. பிரேமலதா சொன்ன காரணம்

83பார்த்தது
மகனுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.. பிரேமலதா சொன்ன காரணம்
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கேப்டனின் இழப்பை மனதில் வைத்துக்கொண்டு வேதனையோடு கூட்டணி தர்மத்திற்காக 40 தொகுதிகளுக்கும் சென்று இரட்டை இலை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகிறேன். விஜய பிரபாகரனுக்காக ஒரு நாள்கூட பிரச்சாரம் செய்யவில்லை. எல்லோரும் ஏன் மகனுக்காக பிரச்சாரம் செய்யவில்லை எனக் கேட்கிறார்கள். விஜயபிரபாகரன் மட்டும் என் மகன் அல்ல. 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் என் சகோதர சகோதரிகள்தான், என் பிள்ளைகள் மாதிரிதான் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி