தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக 9500 கன அடி மற்றும் 10, 000 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 8000 கன அடியாக இருந்தது. நவம்பர் 22 இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 7500 கனஅடியாக நீர் வரத்து சரிந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் தொடர்ந்து வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஆற்றங்கரை ஓரங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.