பென்னாகரம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

58பார்த்தது
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதே அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 23-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கங்கணம் கட்டி விழா தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குடம் அழைப்பு, கோபுர விமான கலசம் சயனாதி வாசம் வைத்தல் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாக பூஜைகள், மண்டல பூஜை, உபசார பூஜை தீபாராதனை நடந்தது. நேற்று காலை ரக்ஷா பந்தனம், கலசங்கள் புறப்பாடும் நடந்தது. பின்னர் கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தசதானம், தச தரிசனம் மற்றும் அம்மன் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய் திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி