தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழிந்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்பட்டு இருக்கிறது இந்த நிலையில் நேற்று வரை 4, 500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6500 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது இதனால் மெயின் அருவி மற்றும் சினி ஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தும் பரிசல் பயணம் சென்றும் மகிழ்கின்றனர்.