பாப்பிரெட்டிப்பட்டி: பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

62பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் தர்மபுரி பாமக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரசாங்கம் வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏவும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுச்சாமி, மாநிலச் சங்க செயலாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் வருகின்ற 11ஆம் தேதி பொம்மிடி மற்றும் கம்பைநல்லூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக வருகை தரும் பாமக தலைவர் அன்புமணி எம்பி அவர்களுக்கும் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பாமக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி