தர்மபுரி: கவுரி நோன்பையொட்டி பூஜை பொருள் விற்பனை ஜோர்

52பார்த்தது
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி நோன்பு அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினம் சுமங்கலி பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கவும், கன்னி பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், நோன்பு விரதத்தை மேற்கொள்கின்றனர். அதன்படி, கேதார கவுரி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் அரூர் குறித்த பகுதிகளில் இருந்து தர்மபுரி நகரப் பகுதியில் பொதுமக்கள் பூஜை மக்கள் வாங்க குவிந்தனர் மேலும் பகுதியில் கடைகளில், நோன்பு கயிறு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், கட்டை சீப்பு, வாழை இலை, பழ வகை, புதிய பானை உள் ளிட்ட பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது இதனால், அப்பகுதியிலுள்ள பூஜை பொருட்கள், பழ விற்பனை கடை களில் நேற்று வியாபாரம் களை கட்டியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி