கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில், ஜில்லென்ற குளிர் பானங்கள் தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் இவை, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, பற்களுக்கு சேதம், செரிமான பிரச்சனைகள், எலும்புகள் பலவீனமடைதல், உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, இயற்கை பானங்களான இளநீர், பழச்சாறு கொடுக்கலாம்.