டாஸ்மாக்கில் நடந்த ஊழல் விஷயம் குறித்து நேற்று (மே 21) பொதுமேலாளர் சங்கீதா, துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு நேரில் வந்த சங்கீதா, அதனை முடித்துவிட்டு செல்லும்போது கடுகடுப்பில் பத்திரிகையாளர், ஆட்டோ ஓட்டுனரை ஒருமையில் திட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் விஷயத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ள நிலையில் தற்போது சங்கீதா சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.