கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

75பார்த்தது
கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல சுற்றுலாத் தலமான யோலண்டாவிலிருந்து 58 கி.மீ தொலைவிலும் 77 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி