பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மிஷ்கின், சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனது மகள் ஒருநாள் என்னிடம் வந்து கருக்கலைப்பு குறித்து கேட்டார். கல்லூரியில் இது தொடர்பாக விவாதித்ததாக சொன்னார். ‘நான் என்ன நினைக்கின்றேன் என்பதைவிட, உனக்கு என்ன தோன்றுகின்றதோ, அதை எழுது. ஒரு வருடம் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கருத்து இருக்கிறதா? மாறிவிட்டதா? என்று பார்’ என்றேன். நான் கடைசிவரை பதிலே கூறவில்லை” என்றார்.