நல்லூர்: சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல்

56பார்த்தது
நல்லூர்: சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் நகர் ஊராட்சி கிராம பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2024-25) ஆண்டு நிதியின் கீழ் ரூ. 10. 00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ இன்று (அக்.11) அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட கவுன்சிலர் நகர் சக்திவிநாயகம், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, வட்டார தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் ரமேஷ், செல்வ ஆனந்த், லெனின், திமுக கிளை செயலாளர் முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி