கடலூர்: மகிழ்ச்சியில் 1798 பயனாளிகள்

4648பார்த்தது
கடலூர்: மகிழ்ச்சியில் 1798 பயனாளிகள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் கலந்து கொண்டு 1798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையினை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அ. ர. சையத் மெஹ்மூத் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி