இந்த ஆண்டில் (2023) பெண்களுக்கு எதிராக மிக மோசமான குற்றங்கள் அரங்கேறி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, மணிப்பூர் கலவரத்தின்போது 2 பெண்களை பலாத்காரம் செய்து, நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. அதேபோல், ராஜஸ்தானில் பழங்குடி பெண்ணையும், கர்நாடகாவில் காதல் விவகாரத்தில் இளைஞரின் தாயாரையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த மூன்று சம்பவங்கள் தான் 2023ல் மிகவும் கொடுமையானது.