பேரூர்: படித்துறையில் தர்ப்பணம் மண்டபம் திறப்பு!

50பார்த்தது
கோவை, பேரூர் நொய்யல் ஆற்றங்கரை படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தர்ப்பண மண்டபம் நேற்று இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு இங்குதான் தர்ப்பணம் செய்து வருகின்றனர். மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, படித்துறைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தர்பணம் செய்யும் இடமும் மழை நீரால் சூழப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2019-ல் நல்லறம் அறக்கட்டளை சார்பில் பேரூர் நொய்யல் ஆற்றின் அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான 5. 5 ஏக்கர் நிலத்தில் புதிய தர்பன மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று புதிய தர்பன மண்டபம் இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ். பி. அன்பரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஆகியோர், இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் உதவி ஆணையர் விமலா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக தர்ப்பண மண்டபத்தில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி