மீன் கழிவுகள் கொட்டிய வாகனம் சிறை பிடிப்பு!

59பார்த்தது
மீன் கழிவுகள் கொட்டிய வாகனம் சிறை பிடிப்பு!
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டதை தடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான TN75 AJ1785 என்ற எண் கொண்ட வாகனத்தில் கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் செயல்படும் MBN எனும் தனியார் மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து கேரளா செல்ல வந்த வாகனத்திலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இப்பிரச்சனை குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், கேரளா மாநிலத்தில் கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகளை கொட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான தண்டனைகள் இருப்பதால், தமிழக எல்லையோர பகுதிகளில் இவற்றை கொட்டி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடை செய்து, கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி