வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழா

77பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு இன்று காலை 11 மணி அளவில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில்
வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் மாவட்ட தலைவர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார். உடன், மாவட்டத் துணைச் செயலாளர் சுகன்ராஜ், வசந்த் குமார், வேல், சரத்குமார், மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு
மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி