முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் முருகன் கேள்வி

69பார்த்தது
முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் முருகன் கேள்வி
பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? '' என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சார்பில் ஒரு மாய்மால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் திமுக அரசு தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும், உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகொலை
இந்தப் பேரதிர்ச்சி அடங்குவதற்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரு தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் கொலையின் மூலம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரித்து வருவதும் அம்பலமாகியுள்ளது.