தமிழக பட்ஜெட்டில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ளபேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பதற்கான விரிவானதிட்ட அறிக்கை ரூ. 4. 625 கோடிமதிப்பில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டது. இதற்கு மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.