கவரப்பேட்டை ரயில் விபத்து: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

83பார்த்தது
கவரப்பேட்டை ரயில் விபத்து: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடந்த 2014 முதல் 2023 வரை மத்திய பாஜக ஆட்சியில் நடந்த ரயில் விபத்துகளில் 281 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1543 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். எனவே தொடர்ந்து நடைபெற்று வருகிற ரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் கவரப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டிகள் சிதறிக் கிடக்கின்ற கோர நிகழ்வு நடந்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக மெயின் லைனில் போக வேண்டிய விரைவு ரயில் லூப் லைனில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதி ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வருகிற ரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி