கொளத்தூர் - Kolathur

சென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த, 22 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறி, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த வாலிபர், திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  அப்போது, இளம்பெண் கூச்சலிட்டதால் தப்பிக்க முயன்ற வாலிபரை, ரயில் நிலையத்தில் இருந்தோர் பிடிக்க முயன்றனர். அதற்குள், அந்த வாலிபர் ஓட்டம் பிடித்து விட்டார். இச்சம்பவம் குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஆனால், சட்டசபை கூட்டம் நடப்பதாலும், தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருவதாலும், இதை போலீசார் மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். எனினும் சில போலீசார், சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த நபரை தேடி வருகின்றனர்.

சென்னை