ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
உதகையில் அரசு ரோஜா பூங்காவில் பெரிய, சிறிய வகை ரோஜாக்கள், கொடி ரோஜா போன்ற 4, 201 வகைகளை உள்ளடக்கிய 32, 000 ரோஜாச் செடிகள் உள்ளன. இந்த உலகப் புகழ்பெற்ற அரசு ரோஜா பூங்காவில் ஆண்டுக்கு சராசரியாக 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து அனைத்து வகையான இப்பூங்காவின் ரோஜாக்களையும் கண்டு மகிழ்கின்றனர். ரோஜா தொகுப்பினைச் செறிவூட்டும் வகையில், முதற்கட்டமாக, 100 புதிய ரக ரோஜா வகைகள் நடவு செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வண்ணம் இப்பூங்கா மேம்படுத்தப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.