சென்னை to திருச்சி: முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

58பார்த்தது
சென்னை to திருச்சி: முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
சென்னையில் இருந்து திருச்சிக்கு முன் பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இன்று(மே 24) இரவு இயக்கப்பட இருக்கிறது. சென்னை எழும்பூரில் இரவு 9:25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய 9 நிறுத்தங்களுடன் காலை 5:30 மணிக்கு திருச்சி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.