சென்னை - புதுச்சேரி இசிஆர் சாலைக்கு தடை

649பார்த்தது
சென்னை - புதுச்சேரி இசிஆர் சாலைக்கு தடை
சென்னை - புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளதால், சாலை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர் )உள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், இடைக்கழிநாடு, மரக்காணம் வழியே புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரமும் 1000 கணக்கான வாகனங்கள் செல்லும்.
இந்தநிலையில், மிக்ஜாம் புயலில் பெய்த மழையால், மாமல்லபுரம் அருகே கடம்பாடி பகுதியில் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

இதனால், இரண்டாவது நாளாக கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை - புதுச்சேரி செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் ச்ந்ன்னைக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி