அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதை பண்ணுங்க

84பார்த்தது
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதை பண்ணுங்க
அடிக்கடி ஏப்பம் வருவது என்பது நமக்கு அசௌகரிமானதாக இருப்பதோடு வெளியில் இதே மாதிரியான நிகழ்வு நடைபெறுவது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டைகோஸ் மற்றும் வெங்காயம் போன்றவை வாயு அதிகரிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள் ஆகும். சுவிங் கம் மெல்லுதல், புகைபிடித்தல் மற்றும் பதட்டம் போன்றவை அதிகப்படியான காற்றை விழுங்குவதற்கு வழிவகுக்கலாம் இதனை குறைத்தாய் ஏப்பத்தையும் குறைக்கலாம். எந்த உணவு சாப்பிடும்போது ஏப்பம் அதிகமாகிறது என்பதை கண்டறிந்து அதனை குறைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது வாயை மூடி உணவை மெல்ல வேண்டும். இந்த நடவடிக்கைகளை செய்தும் நிற்கவில்லை என்றல் மருத்துவரை அணுக வேண்டும்.