ட்ரெண்டிங்கில் கோ பேக் மோடியுடன் மற்றொரு ஹேஷ்டேக்!

77பார்த்தது
ட்ரெண்டிங்கில் கோ பேக் மோடியுடன் மற்றொரு ஹேஷ்டேக்!
தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கமாக கோ பேக் மோடி என்பதே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் விஷயமாக இருந்து வந்தது. தற்பொழுது அதற்கு மாற்றாக GoBack_PanautiModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது தமிழக பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பனோதி என்பதற்கு துரதிஷ்டமானவர் என அர்த்தமாகும். இதற்கு எதிராக வணக்கம் மோடி என்ற ஷேஷ் டேக்கையும் பாஜகவினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.