அக்பரும், சீதாவும் ஒரே இடத்துல இருக்கக்கூடாது

74பார்த்தது
அக்பரும், சீதாவும் ஒரே இடத்துல இருக்கக்கூடாது
மேற்கு வங்க மாநிலம் சிலிகரி சஃபாரி பூங்காவிற்கு புதிதாக அக்பர் என்கிற ஆண் சிங்கமும், சீதா என்கிற பெண் சிங்கமும் திரிபுரா பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் முன்னரே பெயர் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரே பூங்காவில் அக்பரும், சீதாவும் ஒன்றாக இருக்கக்கூடாது என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெங்கால் பிரிவு தலைவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். விலங்குகளிடையே மதத்தை புதுத்துவது போல் உள்ளது இந்த வழக்கு என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி