அதிமுக விருப்பமனு.. இன்று கடைசி நாள்

85பார்த்தது
அதிமுக விருப்பமனு.. இன்று கடைசி நாள்
2024 மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை இன்று (மார்ச்.06) மாலைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து வருகிறது. புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல், பாமக, தேமுதிகவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. விரைவில் தொகுதிப்பங்கீடு நடத்தி முடிக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி