ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 2018 டிசம்பர் மாதம் முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் 2024 டிசம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது.