பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் ஐரா கானுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. ஆமிர் கானின் தனிப்பட்ட உடற்பயிற்சி பயிற்சியாளரான நூபுரை காதலிக்கிறார் ஐரா. இவர்களது திருமணத்திற்கு பெரியவர்கள் சம்மதித்து ஓராண்டுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்தனர். புதன்கிழமை அன்று ஐரா கான் மற்றும் நூபுர் ஷிக்ரே திருமணம் செய்து கொள்கிறார்கள். மணமக்களின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. அமீர்கான் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.