ஒரு மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை

575பார்த்தது
அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 19 மரங்களை கட்டிப் பிடித்துள்ளார். இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பகிர்ந்துள்ளது.